உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பம் - தமிழக அரசு தரப்பில் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேல்முருகன் பட்டினத்தை சேர்ந்தவர் என்பதால், பழங்குடியினர் சான்று கூறிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த ஆறு நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அலைக்கழிப்பும் செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேல்முருகன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் இல்லை. பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்றும், பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அவர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் களத்தில் நேரடியாக ஆய்வு செய்ததில், அவர் பழங்குடியினர் இல்லை என்பது தெரிய வந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 26ம் தேதி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் விளக்கமளிப்பட்டதால், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Velmurugan Suicide Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->