தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் || தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.!
Chennai High Court TNGovt forced conversion
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், 'தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
அது தவிர திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் மதமாற்றத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதற்கான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதிகள் முன் தமிழக அரசு தரப்பில், 'மதமாற்றத்தை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக கன்னியாகுமரி மற்றும் திருப்பூரை தவிர வேறு எந்த பகுதியில் இருந்தும் புகார்கள் வரவில்லை.
ஒருவேளை புகார்கள் வந்தால் அந்த புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'நடவடிக்கை எடுப்பது சரிதான். இதற்கான விதிமுறைகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம்?' என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில், 'இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற புகார்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த கோரிக்கையை வைக்க முடியாது. அது தொடர்பான வாதங்களை முன் வைப்பதற்கு கால அவகாசம் வேண்டும்' என்று கோரப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், ''இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். நாளை முழுமையாக விசாரித்து உத்தரவிட முயற்சிக்கிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஜெகன்நாத் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
English Summary
Chennai High Court TNGovt forced conversion