சென்னை : ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஆயிரம் ரூபாய் கமிஷன் - கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞன் பரபரப்பு வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஏடிஎம் மையத்தில், ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாக கூறி, வேறு ஒரு நபர் மூலம் தினமும் வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் அனுப்பி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அழகப்பாசாலைகள் இருக்கக்கூடிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையத்தில், தினம்தோறும் ஒரு நபர் இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து வருவதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், ஒரே நபர் தொடர்ந்து இந்த ஏடிஎம், அருகில் உள்ள மற்ற மற்ற ஏடிஎம் மையங்களில் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து இந்த செயலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இவர் டெபாசிட் செய்யும் பணம் கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என்று, வங்கி அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். இது குறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், இன்று காலை சுமார் 5 மணி அளவில் அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக போலீசார் காத்திருந்தனர்.

அந்த மர்ம நபர் வழக்கம் போல பணத்தை டெபாசிட் செய்ய வரவே, போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையில் சுமார் 6 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஷாகின் ஷா என்பது தெரிய வந்தது.

மேலும், பாரிமுனை பகுதியை சேர்ந்த பர்வீஸ் என்ற நபர், இவருக்கு தொடர்ந்து பணம் தருவதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் இவருக்கு ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஷாகின் ஷா-வை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பர்வீஸ்-யை போலீசார் தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai keezhpakkam SBI ATM deposit case issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->