சென்னை : மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலை திட்டம் - நல்ல செய்தி சொன்ன மத்திய அமைச்சர்! - Seithipunal
Seithipunal


சென்னை : மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் மேம்பால சாலை திட்டம் ரூபாய் 5800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை இரண்டடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது என்றும், இதில் நீழடுக்கு மேம்பாலத்தில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கு மேம்பாலத்தில் துறைமுகம் செல்லக்கூடிய வாகனங்களும் செல்லும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மதுரவாயல்-துறைமுகம் இடையான பறக்கும் மேம்பால சாலை திட்டம் 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மொத்தம் உள்ள 20.5 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ள இந்த மேம்பால கட்டுமான பணி நான்கு பகுதிகளாக கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மேம்பாலம் கட்டி பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும் என்றும், சரக்கு வாகனங்கள் காத்திருக்கக் கூடிய கால நேரம் 6 மணி நேரம் வரை குறையும் என்றும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai maduvayal tp port over high way road 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->