எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர்...பாஜக .திமுகவை கிண்டலடித் விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண் என்றும் ஒரு மொழியை திணித்தால் எப்படி? என மத்திய அரசுக்கு விஜய் கேள்வி எழுப்பினார்.

மக்கள் நலன் நாட்டின் நலன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அகற்ற வேண்டும் என்று த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், விஜய் பேசினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர் :-விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது என்றும் பூத் ஏஜெண்டுகளை பலப்படுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் த.வெ.க. தமிழகத்தில் முதன்மை சக்தி என்பது நிரூபணமாகும் என்று பேசிய  விஜய் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தோர் அரசியலுக்கு வரக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய விஜய் மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர் என்றும் கல்வி நிதியை மாநில அரசுக்கு தரமாட்டோம் என கூறுகின்றனர் என்றும்  எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை போடுகின்றனர் என பாஜக .திமுகவை கிண்டலடித்தார்.

மேலும்  நிதியை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் பேசிய விஜய் என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர் என விமர்சனம் செய்தார்.

மேலும் இவங்க இரண்டு பேரும் அடித்துக்கொள்கிற போது அடித்துக்கொள்வார்களாம் இதை நாங்க நம்பணுமாம் என நக்கலாக பேசிய விஜய் What bro, its very wrong bro என தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண் என்றும் ஒரு மொழியை திணித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா? என கேள்வி எழுப்பிய விஜய் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; என்றும் அது தனிப்பட்ட உரிமை.பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

LKG and UKG are fighting like children... Vijay takes a dig at BJP, DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->