#சென்னை || ஓபிஎஸ் வீடு முன் நடந்த பயங்கர சம்பவம்.! படுகாயங்களுடன் காவல்நிலையம் ஓடிய பெண் நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு, சண்டையிட்டுக் கொண்ட அதிமுக மகளிர் அணியினர், காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வீட்டுக்கு முன்பாக, அக்கட்சியின் மகளிர் அணியினர் சண்டையிட்டுக் கொண்டனர்.

விருகம்பாக்கம் அதிமுக மகளிரணி நிர்வாகி ஷகிலா மற்றும் மதுரவாயில் அதிமுக நிர்வாகி மஞ்சுளா உள்ளிட்டோர், இன்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு அதிமுக மகளிர் அணி நிர்வாகி கனகலட்சுமி, 'தற்போது ஓ பன்னீர்செல்வத்தை நீங்கள் சந்திக்க அனுமதி இல்லை' என்று தெரிவித்து உள்ளார்.

இதனால் இந்த மூன்று பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக அரங்கேறியது.

இதில் பலத்த காயமடைந்த செங்கல்பட்டு நிர்வாகி கனகலட்சுமி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் வீடு முன்பாக அதிமுகவினர் அடித்து கொண்ட  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியினர் மத்தியிலும்  இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai ops home opposite


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->