அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு ரத்து.!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!!
ChennaiHC quashed case against AIADMK mafoi pandiarajan
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையின் மீது தேசியக்கொடியை போர்த்தி பிரச்சாரம் செய்தார்.
இதற்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், தேசியச் சின்னங்களை அவமதித்தல் கலப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கும் நிரூபணம் ஆகவில்லை என்றும், எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், சட்ட விதிகளை பின்பற்றி வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் வாதிட்டனர்.
இதை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக ஊர்வலம் நடத்தப்பட்டாலும் அது வாக்காளர்களிடம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், இந்த தேசியக் கொடியை அவமதித்ததாக கருத முடியாது எனவும், விதிகளை சரியாக பின்பற்றாமல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி 3 பேர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
English Summary
ChennaiHC quashed case against AIADMK mafoi pandiarajan