அந்த "தம்பி" பெயருக்கு பின்னல் இப்படி ஒரு கதை இருக்கிறதா? மோடி முன்னிலையில் போட்டுடைத்த ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


குஜராத் பிரதமராக இருந்தபோது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி என்று, செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

அவரின் முழு உரை விவரம்  :

"செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. உலகின் பல நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன்

நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.

குஜராத் பிரதமராக இருந்தபோது 20,000 வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை அழைக்க டெல்லி செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்; நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும்.

வெறும் நான்கே மாதங்களில் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமின்றி சுற்றுலா துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும்.

பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றிருக்கிறது. 

மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு தான் செஸ் தலைநகரமாக உள்ளது. தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது; நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதை குறிப்பிடுகிறது. பேரறிஞர் அண்ணா அவரின் தொண்டர்களை தம்பி என்றே அன்போடு அழைப்பார்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chess Olympiad cm stalin speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->