100 ஆண்டுகளுக்கு பிறகு மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட மக்கள்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை திருவிழா பெற்றது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலை, அங்காளம்மன் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், பாளையப்பட்டு தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் ஒரே நாளில் இரண்டு இடங்களில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் அம்மாவாசை அன்று  நடைபெறுவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து அங்காளம்மன் தெருவில் அமைந்துள்ள அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் மயான கொள்ளை திருவிழாவில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இருசமூக  மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கீரனூர் காலனியில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் வழிபட ஒருநாள் பூஜை நடத்த இரு சமூக முக்கியஸ்தர்கள்  தாசில்தார் தலைமையில் காவல் துறை அதிகாரிகள், இரு சமூக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மன ஒப்பந்தம் செய்தனர்.

அப்படி இருந்தும் சில விஷமிகள் இரு சமூக மக்களிடையே எப்படியாவது பிரச்சினையை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்கு அம்மனை வழிபட வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ராஜா சதுர்வேதி தலைமையில் டிஎஸ்பி. பிரதீப் ,இன்ஸ்பெக்டர் வீரமணி, , சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் ப்ரீத்தா மற்றும் போக்குவரத்து காவல்துறை உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

நூறாண்டுகளுக்கு பிறகு உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி 20 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கனகவள்ளி தேசிங்கு ராஜா தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள், பக்தர்கள் என அனைவரும் அங்காளம்மனுக்கு வேப்பிலை நிறத்தில் சேலை, தேங்கா, கற்பூரம் வத்தி,மாலை ,பூ  வளையல், குங்குமம் ன, மஞ்சள் என பூஜைக்கு   தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு உ.கீரனூர் காலனி பகுதியில் வசிக்கக்கூடிய ஆதிதிராவிடர் மக்கள்  அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் செல்லும் சாலையின் வழியாக வந்த திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையின் வழியாக ஊர்வலமாக சென்று அங்காளம்மன் தெருவில் அமைந்துள்ள அம்மனுக்கு நகராட்சி 20- வார்டு கவுன்சிலர் கனக வள்ளி தேசிங்கு ராஜா அவர்கள் மாலை அணிவித்து ரூபாய் 15 ஆயிரத்துக்கு ஒரே கட்டி கற்பூரம் ஏற்றி வைத்து பக்தர்களை வியப்பூட்டும் அளவிற்கு  ஏற்றிய கற்பூரம் தீபம் சுமார் ஒரு ஆள் உயரத்திற்கு தீபம் எரிந்தது.
  
அங்காளம்மன் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர் மக்கள் அம்மனை  தரிசித்து விட்டு மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொண்டனர், இரு சமூக மக்கள் ஒற்றுமை சிறப்பாக இருந்ததாக  சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.அதன் பிறகு அங்காளம்மன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், பாளையப்பட்டு தெருவில்  அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் அந்தந்த சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு  தீ சட்டியை ஏந்தி கொண்டு முக்கிய தெருவின் வழியாகவும், சாலையின் வழியாக வீதி வழியாகசென்று  ஐந்து மணிக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் சுற்றி வரும் அற்புத காட்சிகளை  உளுந்தூர்பேட்டை வசிக்கும் பொதுமக்கள் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு இரண்டு அம்மனும் நேருக்கு நேர்  சந்திக்கும் காட்சி அப்பொழுது அம்மன் மேல் பூக்களை தூவும் காட்சியும் இந்த அம்மனிடமிருந்து அந்த அம்மன் மேல் பூ மலர்கள் தூவும் அற்புத காட்சிகள் முடிந்த பின்னர் அம்மனுக்கும் தீபாரதனை காட்டும் காட்சி நடைபெற்றது . இதனைக் கண்டு பொதுமக்கள் அனைவரும் தரிசனம் செய்தனர்.அப்பொழுது அம்மனுக்கு முன்னால் பட்டாசு வெடித்து பம்பை உடுக்கை மேளதாளங்கள் முழங்க  அனைவரும் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி,  பராசக்தி என்று கோஷமிட்டபடி  பக்தர்கள் வழிபட்டனர்.
இவ்விழாவில் தர்மகர்த்தா, கோவில் பூசாரிகள், முக்கியஸ்தர்கள்,, வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை நண்பர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள், உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள 50-ம் மேற்பட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 100 years, Adi-Dravida people attend graveyard robbery ceremony


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->