ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு!
Australian Cricketer Retired Steve Smith
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஸ்மித், 73 ரன்கள் சேர்த்தார். ஆனால், இந்திய அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா தோல்வியடைந்து வெளியேறியது.
அரையிறுதியில் தோல்வியடைந்த பின்னர், ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 35 வயதான அவர், இதுவரை 170 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி, 12 சதங்கள், 35 அரைசதங்களுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக 2016ஆம் ஆண்டு அவர் விளாசிய 164 ரன்கள், அவருடைய உயர்ந்த ஸ்கோராகும். அத்துடன், ஒரு லெக்ஸ்பின்னராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஸ்மித், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேட்சிங் திறனிலும் சிறந்து விளங்கிய அவர், 90 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவேன் என்று ஸ்மித் உறுதியளித்துள்ளார்.
English Summary
Australian Cricketer Retired Steve Smith