சுவர் விளம்பரத்துக்கு கூட "காசு இல்லப்பா".. விரக்தியின் உச்சியில் பாஜகவினர்.!! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடும் நிலையில் பாஜக சார்பில் தடா பெரிய சாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயரும் தற்போதைய பாஜக நிர்வாகியமான கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இதனால் அதிருப்தியில் இருந்த தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். 

தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகாயினிக்கு தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாதது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு செலவு செய்ய இதுவரை முன்வராததால் விரத்தியில் இருப்பதாகவும், கிராமங்களில் சுவர் விளம்பரம் செய்ய பணம் கேட்டால் கரித்துண்டை கொண்டு சுவர் விளம்பரம் செய்யுங்கள் எனவும் அக்கட்சி முக்கிய நிர்வாகிகளே கூறுவதாக பாஜக தொண்டர்கள் முனுமுனுக்கினர்.

மேலும் தேர்தலுக்கு முன்பு எங்கள் பணத்தை கொண்டு கட்சிக்கு செலவு செய்தோம் தற்போது கட்சி வேட்பாளர் அறிவித்தவுடன் நாங்கள் ஏன் செலவு செய்ய வேண்டும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளே ஒதுங்குவதால் அடிமட்ட தொண்டர்கள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருப்பது களத்தில் பிரதிபலிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram BJP is at despair due to lack of money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->