கிண்டியில் முதலமைச்சர்... தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..!!!
Chief Minister Guindy pays floral tribute portrait Theeran Chinnamalai
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவர் 'தீரன் சின்னமலை'. அப்படிப்பட்ட வீரரின் 269-வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கிண்டியிலுள்ள அவரது திரு உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதுமட்டுமின்றி, மாவீரன் 'தீரன் சின்னமலை' படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீரன் சின்னமலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
English Summary
Chief Minister Guindy pays floral tribute portrait Theeran Chinnamalai