அடேங்கப்பா திட்டங்கள்!!! நீலகிரியில் இன்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்...! அதன் விவரம் வேண்டுமா?
chief Minister inaugurate various projects Nilgiris today
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அவ்வகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதில் முதலில் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புதிதாக ரூ.353 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து உரையாட இருக்கிறார்.பிறகு காலை 11 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கும் விழாவில், ரூ.494.51 கோடியில் முடிவுற்ற 1703 திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.
இதன் பிறகு குறிப்பாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லாமல் காட்டேரியிலிருந்து ஊட்டிக்கு செல்லும் 3-வது மாற்றுப்பாதையை திறந்து வைக்கிறார்.பிறகு ரூ.130.35 கோடியில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், 15,634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாட இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்திலிருந்து மாலையில் புறப்பட்டு கோவைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளிகும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16000 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
இந்த விழா முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 6.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்று, இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.மேலும் இவரைக்காண நீலகிரி மாவட்ட மக்கள் அதிகாலையில் இருந்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
English Summary
chief Minister inaugurate various projects Nilgiris today