திமுக கூட்டணியின் 40 - 40 வெற்றி அதிமுகவை உறுத்துகிறது - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..! - Seithipunal
Seithipunal


இம்முறை தமிழக சட்டசபை கூடியதில் இருந்தே அதிமுகவினர் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்றும் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பாதுகாவலர்கள் மூலம் சபையை விட்டு வெளியேற்றினார். தொடர்ந்து இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவிற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த அவையில் பேச வாய்ப்பு அளிக்கப் பட்டது. அனைவரும் விரிவாக கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நானும் தெளிவான விளக்கத்தை அளித்தேன்.

அன்றைய தினமே அதிமுக அவையில் இருந்து தனது கருத்தை அவையில் பதிவு செய்யாமல், ஏதேதோ காரணம் கூறி அவையை விட்டு வெளியேறினார்கள். கேள்வி நேரம் முடிந்த பிறகே மற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது அவையின் முக்கிய விதி. 

ஆனால் அதிமுகவினர் அவை விதியை மதிக்காமல் திட்டமிட்டு பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த பிறகும் அதிமுக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது திமுக கூட்டணியின் 40 - 40 வெற்றி அதிமுகவினரின் கண்களை உறுத்துவதாகவே தெரிகிறது" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister M K Stalin Speaks About ADMK In Assembly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->