கொளத்தூர் வந்தாலே புது எனர்ஜி! ஓட்டுப்போடாத மக்களுக்கும் நல்லது செய்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்!
Chief Minister Stalin said that more than 1400 temples have been consecrated under the DMK Dravidian model rule
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1400க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் அறநிலையத்துறை கல்லூரியில் பயின்ற மாணவ , மாணவியர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர் அறநிலையத்துறை கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளிடம் பேசிய முதலமைச்சரின் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சியில் 1400க்கும் அதிகமான கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது தனி உற்சாகம் பிறக்கிறது. கொளத்தூர் வந்தாலே புது எனர்ஜி வந்துவிடுகிறது. கொளத்தூர் மட்டுமல்லாமல் அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதியாகவே நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதி மட்டுமல்லாமல் பல்வேறு தொகுதிகளில் புதிய காவல் நிலையம் அமைய உள்ளது. அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவில்களுக்கு சொந்தமான ரூபாய் 5000 கோடி மதிப்பிலான் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஓட்டுப்போடாத மக்களுக்கும் திராவிட மாடல்ல ஆட்சி நல்லது செய்து வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister Stalin said that more than 1400 temples have been consecrated under the DMK Dravidian model rule