110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்...!!! தமிழக சட்டசபையில் இன்று மீனவர்கள் குறித்து...?
Chief Minister under Rule 110 Regarding fishermen Tamil Nadu Assembly today new Announcements issued
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தமிழக சட்டசபையில் தமிழக மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது,"இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழி செய்யும் பொருட்டு தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டம்.மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
15,300 மீனவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.20.57 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.வலை பின்னுதல், படகு பழுது பார்த்தல், வண்ணமீன் தொட்டி தயாரிப்பு போன்ற பயிற்சிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும்.
7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.
இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் " எனத் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது,இந்த திட்டங்களினால் மீனவ சமுதாயத்துக்கு மேலும் பல நல்லது நடக்கும் என்றார்.
English Summary
Chief Minister under Rule 110 Regarding fishermen Tamil Nadu Assembly today new Announcements issued