தேர்தல் நடத்தை விதிகள் எப்போது வாபஸ்? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. முன்னதாக தேர்தல் தேதி மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தவோ, அறிவிப்புகள் வெளியிடவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை வெளியானதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் இருந்து தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்த புகாரும் வரவில்லை. 

மேலும் தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்றதாக எனக்கு தகவல் வரவில்லை. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மிகவும் அமைதியான முறையில் தான் நடந்துள்ளது. இதையடுத்து தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் இருந்தும் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றுவோம். 

இதையடுத்து இந்த பதிவேற்ற முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி குடியரசுத் தலைவரிடம் அளிப்பார். அதன் பின்னரே மத்தியில் புதிய அரசு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ம் தேதி வரை அமலில் இருக்கும். 7ம் தேதி காலை தான் நடத்தை விதிகள் திரும்ப பெறப்படும்" என்று சத்யப்ரதா சாஹு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chielf Election Comissioner Says about Election Conduct Rules Withdawal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->