அடடே., முக்கிய விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீனா.! அதிர்ச்சியில் G7 நாடுகள்.! - Seithipunal
Seithipunal


கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த விவகாரத்தில், இந்தியாவுக்கு சீனா நாடு ஆதரவு தெரிவித்து இருப்பது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஏற்றுமதி விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது தீர்வாகாது என்றும் ஜி7 நாடுகளின் விமர்சனத்திற்கு சீனா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கோதுமை ஏற்றுமதிக்கு கடந்தவாரம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவின் இந்த ஏற்றுமதி தடை முடிவுக்கு, ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், இது குறித்து சீன நாட்டின் செய்தி நிறுவனமான 'குளோபல் டைம்ஸ்' இந்தியாவுக்கு ஆதரவாக தனது கட்டுரையை பதிவிட்டு உள்ளது. மேலும் ஜி7 நாடுகளுக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு உள்ளது. அதில், 

"கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதிக்க கூடாது எனக் கூறும் ஜி-7 நாடுகள், உணவுச் சந்தை வினியோகத்தை நிலைப்படுத்த, தங்கள் நாட்டின் ஏற்றுமதியை ஏன் அதிகரிக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், ஏற்றுமதி விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது தீர்வாகாது என்றும் ஜி7 நாடுகளின் விமர்சனத்திற்கு சீனா தற்போது பதிலடி கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china support india may 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->