நெல்லையில் வெடித்தது மோதல்!...ஆட்கள் இல்லை - எஸ்.பி. வேலுமணி பரபரப்பு உரை!
Clash breaks out in paddy field no people sp velumani sensational speech
சென்னை ராயப்பேட்டையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில், கழகத்தில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமான கருத்துகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற கள ஆய்வுக்குழுவில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. நெல்லையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியது. இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை எஸ்.பி.வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
அப்போது, நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆட்கள் இல்லை என்று கூறிய அவர், உரிமைகளை மீட்டெடுத்த இயக்கமான அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்போம் என்று கூறினார்.
English Summary
Clash breaks out in paddy field no people sp velumani sensational speech