நெல்லையில் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..!
CM M K Stalin Gives Explanation About Nellai CPI Office Attack
இன்று சட்டசபையில், நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, " கடந்த ஜூன் 13 ம் தேதி நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இரு வேறு பிரிவு சமூகத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் இதுவரை 17 பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
மேலும் விசாரணையில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளதால் வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. திமுக ஆரம்பத்தில் இருந்தே சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்தே வந்துள்ளது.
மேலும் இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் வழங்கப் பட்டு வருகிறது. இதற்கான சிறப்பு சட்டங்கள் கொண்டு வருவதை விட, ஏற்கனவே உள்ள சட்டங்களின் அடிப்படையில் முறையான தண்டனை தருவதே சிறப்பு.
இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க அரசுத் தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப் படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று பேசியுள்ளார்.
English Summary
CM M K Stalin Gives Explanation About Nellai CPI Office Attack