சுட்டு படுகொலை! பெரும் அதிர்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின்! அதிரும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக், மும்பையில்  நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 

சித்திக் மீது மர்ம நபர்கள் சுட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்து. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 66 வயதான பாபா சித்திக், 48 ஆண்டுகாலமாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்து வந்தார். 

கட்சி உடைந்த பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். இந்த படுகொலை வழக்கில் இதுவரை இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சூழல் முற்றிலும் சீர் குலைந்துள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விதித்துள்ள கண்டன செய்தியில், "தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.

பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Condemn to Gunshot Baba Siddique death Mumbai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->