மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
CM MK STalin wish to CPIM General Secretary
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த வாழ்த்து செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு வாழ்த்துகள்..!
நாட்டில் அவசரநிலை காலம் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு மாணவ தலைவராக அதனை எதிர்த்து நின்றதுமுதல், கேரளத்தின் கல்விக் கொள்கையை முன்னேற்றக் கண்ணோட்டத்துடன் வடிவமைத்தது வரை, அன்னாரது பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கான நமது ஒருங்கிணைந்த முயற்சியில் மேலும் வலுவான உறவை திமுக எதிர்நோக்கி காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CM MK STalin wish to CPIM General Secretary