#BigBreaking || சென்னை குடிசை மாற்று வாரிய கட்டிட விபத்து.! சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
CM STALIN ANNOUNCE FUND FOR ARIVAKULAM BULDING ACCIDENT
சென்னை அருகே குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, திருவொற்றியூர் அரிவாகுளத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த குடியிருப்பில் இருந்து மக்கள் அவசரஅவசரமாக வெளியேற முயன்ற போது கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் உடனடியாக மாற்று வீடு ஏற்பாடு செய்ய உத்தரவிட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CM STALIN ANNOUNCE FUND FOR ARIVAKULAM BULDING ACCIDENT