பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
cm stalin letter to pm modi for ukrain indian student issue
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "உக்ரைனில் நிலவி வரும் போர் சூழலின் காரணமாக, மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியைத் தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்.
வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும்" என்று அந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
cm stalin letter to pm modi for ukrain indian student issue