நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! அண்ணாமலை பாணியில் CM ஸ்டாலின் போட்ட டிவிட்!
CM Stalin Say Tomorrow one important announce
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ள தாக, தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தள பக்கத்தில் அழைப்பு விடுத்தது இருந்தார்.
இந்நிலையில், இதனை குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், "நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், அரிட்டாபட்டி போராட்டக்குழு இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான திட்டத்தை ரத்து செய்ய கோரி உள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அரிட்டாபட்டி மக்களுக்கு நாளை ஒரு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்" என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
தற்போது அண்ணாமலை பாணியில் முதல்வர் ஸ்டாலினும் நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என்று டிவிட் செய்து இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
English Summary
CM Stalin Say Tomorrow one important announce