ஜூன் 4 வெற்றி கலைஞருக்கு சமர்ப்பணம்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal



திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி, 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியன்று நிறைவடைகிறது. 

இந்த ஓராண்டு கால கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை, நிறைவேற்றியுள்ளோம். மேலும் கிண்டியில் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறு தழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் ஆகியவற்றை அமைத்துள்ளோம். 

மேலும் மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்தையும் வரலாற்று ஆவணமாக அமைத்துள்ளோம். இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, கொடிக்கம்பங்களில் புதிய கொடிகளை ஏற்ற வேண்டும். 

மேலும் உள்ளூர் மைதானங்களில் இளைஞர்களை ஊக்குவித்து விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்க வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும். மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியா முழுவதிலும் திமுகவின் மக்கள் நலத்திட்டங்களை தாக்கி பேசி வருகின்றனர்.

தோல்வி பயத்தில் அவர்கள் நடுங்குகிறார்கள். ஜூன் 4ம் தேதி திமுக தோழமையில் கிடைக்கப் போகும் வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிப்போம். கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியை இந்திய அளவில் சிறப்பான வெற்றியுடன் நிறைவு செய்வோம்" என்று மு. க. ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin says June 4 victory will be dedicated to kalignar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->