பெண் போலீஸ் எஸ்ஐ.,க்கு கத்திக்குத்து., முதல்வர் ஸ்டாலின் போட்ட டிவிட்.!
cm stalin twit about police si attacked
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அடுத்த பழவூர் பகுதியில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக ஆறுமுகம் என்ற நபருக்கும், காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் தெரசாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காவல் ஆய்வாளரை சரமாரியாக குத்தி உள்ளார்.
அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் உடனடியாக செயல்பட்டு, ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன், காவல் உதவி ஆய்வாளரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்து டிவிட்டர் பக்கத்தில், "திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
cm stalin twit about police si attacked