ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய வர்த்தக-தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். 

இந்த தரவரிசை பட்டியலில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் புதுமையான மற்றும் பரவலான தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளுடன் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை முன்னெடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் பெற்றமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டமைக்காக எஸ்.நாகராஜன் மற்றும் திருமதி ஆர்.வி. சஜீவனா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்துவரும் பல புதுமையான நடவடிக்கைகளினால், எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். டான்சிம் குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN TWIT JULY


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->