அதானியை சந்தித்த CM ஸ்டாலின் மருமகன் & தனிப்பட்ட உதவியாளர்கள்! ஆதாரம் இருக்கு - பாஜக அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "அதானி நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள தொடர்பை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

அதானி நிறுவனம் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றால், அதனை வரவேற்க வேண்டும். காரணம், இது தமிழகத்திற்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். 

அதானியை முதலமைச்சர் சந்தித்ததாக பாஜக ஒருபோதும் கூறவில்லை, அதானியை சந்திப்பது குற்றமில்லை. சட்டமன்றத்தில் தானே முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலின் அதானியை சந்திக்கவில்லை என கூறுகிறாரே.

ஆனால் அவரின் ஐஏஎஸ் அதிகாரிகள், தனிப்பட்ட உதவியாளர்கள் அதானியை சந்திக்கின்றனர் என்பதை மறுப்பாரா? இதற்கு மறுப்பு தெரிவித்தால் ஆதாரத்தை வெளியிட பாஜக தயார்" என்று தெரிவித்தார்.

மேலும், "முதலமைச்சர் சட்டமன்றத்தில் அதானியை சந்தித்தது தவறு என்பது போல பேசி இருக்கிறார்.  ஆனால் அவரின் குடும்பத்திலிருந்து யாராவது சந்தித்திருந்தால், அது தவறு தானே என்ற கேள்வி எழுகிறது. 

அதானி தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை என கூறுகிறார்கள், தமிழக முதல்வர் அதானியை சந்திக்கவில்லை என்கிறார். ஆனால், ஒப்பந்தம் போட்டு இருக்காங்க, அவரது மருமகன் அணியை சந்தித்து இருக்கிறார்" எனக் குறிப்பிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CMStalin Annamalai BJP Adani DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->