தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? ஆலோசனையை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.! வெளியாக போகும் அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 250 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, உத்திரப் பிரதேசத்தில் நாளை முதல் இரவு 11 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.

சென்னை, தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தற்போது, தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்துவது, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய பிரதேஷ், உத்தர பிரதேஷ் மாநிலங்கள் போல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வித்திக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CMStalin OmicronVirus Lockdown


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->