கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றும், பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
 

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது, "கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல.

எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.  

பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்குதான்.

மாநில அரசுக்கு தொந்தரவு கொடுப்பது எங்கள் நோக்கமல்ல. முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது.

முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது.தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore car blast case annamalai press meet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->