திமுக அமைச்சரின் சிண்டிகேட்டால் விவசாயிகளை கண்ணீரில் மிதக்கவிடும் கண்வலிவிதை விவசாயம்.! வெளியான அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கண்வலிவிதை (GLORIOSA SUPERBA-செங்காந்தள் மலர்)  என்றழைக்கப்படும் விதையிலிருந்து எடுக்கப்படும் கோல்சிஸைன்  கோல்சிகோசைட் (Colchicine  Colchicoside) என்ற மருத்துவப்பெயரில்  இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இது பாம்புக்கடி, புற்றுநோய், மூட்டுவலி நிவாரணி போன்ற மருந்திற்கு மூலப்பொருளாக அமைகிறது. தமிழகத்தில் கரூர், திருப்பூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, நாமக்கல், சேலம், விருதுநகர், திருச்சி, வேதாரண்யம், ஆகிய இடங்களில் 20,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மூலனூர், தாராபுரம், தொப்பம்பட்டி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் 14,000  ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. 2018-ம் ஆண்டில் ரூ.3,750 –க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கண்வலிவிதை, திமுக அரசு வந்தபின்பு தற்போது ரூ.1300-க்கு குறைந்துவிட்டது.

இதற்கு முக்கியக்காரணம் விதைகுறித்து விவரமறிந்த திமுகவின்  கொங்குமண்டல அமைச்சரும், அவரது இடைத்தரகர்களும் சிண்டிகேட் அமைத்துக் கொண்டதே விதை விலைச்சரிவுக்கு காரணமென்று விவசாயிகள் குறிப்பிடுகிறார்கள்.

நல்லவிலை கிடைத்து இலாபகரமாக இருந்த கண்வலிவிதை விவசாயம் திமுக இடைத்தரகர்களின் தலையீட்டால் விவசாயிகளின் கண்ணில் நீரை வரவழைக்கும் விவசாயமாக மாறிவிட்டது.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கண்வலிவிதைக்கு  குறைந்தபட்ச ஆதாரவிலை(MSP) நிர்ணயப்பதோடு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய அனுமதிப்பதோடு, மருந்து உற்பத்தியாளர்களே நேரடியாக கொள்முதல் செய்யும் வண்ணம் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது.

இதுகுறித்து கோவையில் நடைபெற்ற கண்வலிவிதை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டத்தில்  முதல்வரின் கவனத்தை ஈர்க்க விரைவில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.   

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காணாத பட்சத்தில் பாஜக சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Colchicine  Colchicoside issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->