சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்பொது? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!
Community vice census
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் நாங்களும் வலியுறுத்தி உள்ளோம் என்று, இந்தியக் குடியரசு கட்சியின் எம்பியும், மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொழில்நுட்ப ரீதியான பதிவுகளில் குழப்பம் இருக்கிறது.
இதனை சரிசெய்து சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, இந்தியக் குடியரசு கட்சி சார்பில், நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் யார், யார் எத்தனை சதவீத மக்கள் உள்ளனர் என்பது தெரிந்துவிடும். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தெரியவில்லை" என்று அமைச்சர் தெரிவித்தார்.