40 தொகுதியிலும் தனித்து தான் போட்டி: சீமான் திட்டவட்டம்!
Competition 40 constituencies alone Seeman speech
வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதை தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து சீமானிடம் கேட்டபோது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி தொடர்பாக தவறான தகவல்களை வதந்தியை பரப்புகிறார்கள்.
40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண்கள் வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.
எங்களது வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன். கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்காததை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Competition 40 constituencies alone Seeman speech