#காஞ்சிபுரம் || இருளர் இன பெண்களிடம் அத்துமீறிய நபர்.. டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!!
Complaint to DGP office to take action against who sexually assaulted irular women
காஞ்சிபுரம் மாவட்டம் படூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் இருளர் இன மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். வட்டியும் முதலுமாக பணம் திருப்பி கொடுத்தும் ஏராளமானவர்களை அவர் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும் இருளர் இன பெண்களுக்கு பாலு பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாலுவிடம் கொத்தடிமைகளாக இருந்த இருளர் இன மக்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக இருளர் இன பெண்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எனினும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் மகளிர் அமைப்பினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்கள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய மகளிர் அமைப்பு சேர்ந்த நிர்வாகி "இருளர் இன மக்கள் மிரட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் பெற்று தர வேண்டும்.
இது தொடர்பான புகார் மனுவை தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ளோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என மகளிர் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Complaint to DGP office to take action against who sexually assaulted irular women