CONFIRM துணை முதல்வர் உதயநிதி தான்?.....இதோ வெளியான ரகசிய தகவல் !
Confirm Deputy Chief Minister Udhayanidhi Here is the secret information released
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்தார். தொடர்ந்து அப்போது அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில், அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் வகித்து வந்த மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
அந்த நேரத்தில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும், முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட 3 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Confirm Deputy Chief Minister Udhayanidhi Here is the secret information released