காபந்து பிரதமருக்கு கண்ணியம் ஏது? மோடியை விளாசும் காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 232 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைத்தளத்தில், " மோடி இப்போது காபந்து பிரதமராக இருக்கிறார். இவர் ஒரே கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று மார்தட்டிக் கொள்வதன் மூலம் வரலாற்றை மறைக்க முயல்கிறார்.

உண்மையில் ஜவஹர்லால் நேரு 1952, 1957 மற்றும் 1962ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் 350 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி தொடர்ந்து 3 முறை ஆட்சியமைத்துள்ளார். ஆனால் மோடி 2024ம் ஆண்டு தேர்தலில் 240 இடங்களில் தான் வென்றுள்ளார் என்பதை மறந்து விட்டார். 

மேலும் 1989ம் ஆண்டு தேர்தலில் 197 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அப்போது கண்ணியம் கருதி ராஜீவ் காந்தி ஆட்சியமைக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதிருக்கும் காபந்து பிரதமரிடம் இந்த கண்ணியத்தை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்?

இந்த காபந்து பிரதமர் மோடி மக்களின் தீர்ப்பை மீறி செயல்பட்டு ஆட்சியமைக்க முயல்கிறார்" என்று பிரதமர் மோடியை குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Accuses PM modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->