பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி-பாஜக கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக  ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்திய மக்களால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் நிராகரிக்கப்பட்ட பிறகு  இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும், நிலையற்ற தன்மையை உருவாக்கவும் முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையை பயன்படுத்தி நமது பங்குச்சந்தையை முடக்க பார்ப்பதாகவும், இதனால்,  திங்கள்கிழமை பங்குச் சந்தை சீர்குலைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரியதாக உள்ளதாக தெரிவித்த அவர், .ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் கடந்த ஜூலை மாதம் முழு விசாரணை முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் எதுவும் பேசாதவர்கள், தற்போது ஆதாரமற்ற தாக்குதலை நடத்தி வருவதாக விமர்சித்தார்

இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஜார்ஜ் சோரோஸ்தான் ஹிண்டன்பர்க்கில் முதலீடு செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்புணர்ச்சியில், இந்தியா மீது காங்கிரஸ் வெறுப்பை வளர்த்து வருவதாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய பங்குச் சந்தை சீர்குலைந்தால் சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்கள். ஒட்டுமொத்த பங்குச்சந்தையையும் நொறுக்க காங்கிரஸ் விரும்புவதாக சாடினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress conspiracy to destabilize stock market bjp harshly criticized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->