ஐக்கிய ஜனதா தளத்தின் உதவி எங்களுக்கு தேவையில்லை - ஜெய்ராம் ரமேஷ்..!
Congress Do Not Need United Janata Dal Partys Help Says Jairam Ramesh
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது காங்கிரஸ் கூட்டணி தான் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்.
முன்னதாக 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியது. ஆனால் இம்முறை பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.
மேலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் நிதிஷ் குமார் கூட்டணி மாறுவார் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அது தான் நிதிஷ் குமாரின் பழக்கம் என்று அனைவரும் அறிவர். ஆனால் இம்முறை அவர் என்ன செய்ய நினைத்தாலும் நாங்கள் அவர் இல்லாமல் ஆட்சியை பிடிப்போம்.
அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் உதவி எங்களுக்கு தேவை இல்லை. மேலும் இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய வரிசையில் நிற்கப் போகின்றன.
கடந்த முறை நாங்கள் தோல்வியடைந்த அனைத்து மாநிலங்களிலும் இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். இம்முறை எல்லா மாநிலங்களுக்கும் எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்திற்கு சென்றபோது கண்கூடாக பார்த்ததைத் தான் நான் கூறுகிறேன்" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
English Summary
Congress Do Not Need United Janata Dal Partys Help Says Jairam Ramesh