கர்நாடக தேர்தல் யுத்தம் || எகிறி அடிக்கும் காங்கிரஸ்.. பரிதவிக்கும் பாஜக..!! முன்னிலை விவரம் இதோ..!!
Congress lead in Karnataka elections
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 203 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதனை எடுத்து பாஜக 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 15 தொகுதிகளிலும், மற்ற வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
ஷிக்கான் தொகுதியில் கர்நாடக முதல் பசவராஜ் பொம்மை முன்னிலை வகிக்கிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே சிவக்குமார் முன்னிலையில் இருக்கிறார். சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹூப்பள்ளி தார்வாட் மத்தி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலை வகிக்கிறார்.
அதே போன்று சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.டி ரவி முன்னிலை வகிக்கிறார். அதேபோன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதானி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் லட்சுமணன் சவடி முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்த்தியின் மகன் பிரியங்காவுக்கு சித்தாப்பூர் தொகுதியில் முன்னிலை வைக்கிறார்.
English Summary
Congress lead in Karnataka elections