வட மாநில இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத கூட தெரியாது - ப.சிதம்பரம் சர்ச்சை பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவிக்கையில், "மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு. 

இந்தி பேசும் பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வது கிடையாது. அவர்களால் ஒரு வாசகத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுத முடியாது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டைகள் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரதியை கண்டித்து இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தை செய்து வருகின்றனர்.

"திராவிட நல் திருநாடும்" என்ற வரி அடங்கிய ஆயிரம் அஞ்சல் அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை எதிர்க்கும் தமிழக ஆளுநர் இனியும் தமிழகத்தில் இருக்கக் கூடாது, அவர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress p chidambaram say north indian youngsters no English writing skill


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->