இப்ப இதுதான் பெரிய பிரச்சனையே... குறிவைக்கப்படும் இளைஞர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் இன்றைக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. சட்ட ஒழுங்கிற்கு பெரும் சவாலாகவும் உள்ளது.

வெளிநாட்டில் வேலை தேடும், இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக கணினி சார் குற்றங்களில் ஈடுபடுத்தும் ‘சைபர் Slavery’ பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.

இதனால் நம்ம இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்க நமக்குள் உள்ள ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும். 

தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைக் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும். எந்தவித தீவிரவாதம், பயங்கரவாதமாக இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க முழு ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதைத் தடுக்க, தமிழ்நாடு காவல்துறையும், அண்டை மாநில காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இணையவழி குற்றம் என்பது எவ்வித எல்லைகளும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பெருகி வரும் மிகச் சிக்கலான பிரச்னை. இணையவழி குற்றவாளிகளைப் பிடிக்க, பிற மாநிலங்களுக்கு செல்ல மாநில காவல்துறை பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கு.

இணையவழி குற்றங்களை தடுக்கவும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police DGP Conference CM MK Stalin speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->