உங்க அயோக்கியத்தனத்தை நிறுத்துங்க! தமிழனை அடிமை சங்கிலியில் பூட்டும் திராவிடம் - திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கும் அர்ஜுன் சம்பத்! - Seithipunal
Seithipunal


இந்து மக்கள் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "Raviphobia தற்பொழுது அனைத்து உடன்பிறப்புகளையும் ஆட்டிப்படைக்கிறது. பாடாமல் விட்டால் திராவிடம் அழிந்து விடும் என்ற அளவுக்குத் தான் இவர்கள் கட்டமைத்த புரட்டின் வலுவே.

ஹிந்தி மறுப்பின் திணிப்பை ஏழை மாணவர்களின் பாடத்திட்டத்தில் வலுக்கட்டாயமாக புகுத்தும் அயோக்கியத்தனத்தை நிறுத்த வேண்டும். ஹிந்தி படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவனுக்கு தமிழகத்தில் சர்வாதிகாரத்தனமாக உரிமை மறுக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள் உருது படிக்கலாம் ஆனால் மூன்றாவது மொழியாக மற்றவை கற்க கூடாதென்பது கல்விக்கான அடிப்படை உரிமைக்கு எதிரானது. 

ஆண்டுக்கு அதிகமாக தனியார் பயிற்சி மையங்களில் ஹிந்தி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் ஏராளம். 

தமிழ் மீது பற்று வையுங்கள் ஆனால் ஹிந்தியை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துங்கள். ஹிந்தி மீது பற்று வைக்க தேவையில்லை அதை ஒரு மொழியாக மட்டும் பார்க்கும் எண்ணம் வேண்டும். 

பாரத வடக்கு பகுதிகளில் உள்ள சகோதரர்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஹிந்தி இன்றியமையாயது. ஆங்கிலம் இருந்தால் போதும் என்ற எண்ணம்" நான் படித்தவர்களிடம் மட்டுமே உறவு வைத்துக் கொள்வேன்" என்ற மேட்டுக்குடி மனப்பான்மையைச் சார்ந்தது.

மூன்றாவது மொழியாக எந்த மொழியேனும் கற்றுக் கொள்ளலாம் என்பது ஹிந்தி திணிப்பிற்கு கீழ் வராது.

கேரளத்தில் ஹிந்தி படிக்கிறார்கள் மலையாளம் அழியவில்லை,
ஆந்திரத்தில் ஹிந்தி படிக்கிறார்கள் தெலுங்கு அழியவில்லை, 
கர்நாடகத்தில் ஹிந்தி படிக்கிறார்கள் கன்னடம் அழியவில்லை, 

திராவிடம் என்னும் பெயரில் தமிழனை அடிமை சங்கிலியில் பூட்டி தன் குடும்பத்தின் வயிறை வளர்த்துக் கொள்ள திமு கழகம் கையாளும் அயோக்கியத்தனம்  நான் ஹிந்தி எதிர்ப்பும், திராவிடமும்"  என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMK Arjun sambath Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->