#ManipurViolence || மோடியின் மௌனத்தை இந்தியா மன்னிக்காது! பாஜகவை விளாசிய காங்கிரஸ்!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் மெய்டி மற்றும் குகி சமூக மக்களிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி குகி இன பெண்கள் 3 பேர் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு ஆடைகள் இன்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தசம்பவம் குறித்தான வீடியோ தற்போது வெளியான நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் "மணிப்பூரில் மனிதநேயம் இறந்துவிட்டது. மோடி அரசும் பாஜகவும் மாநிலத்தின் நுட்பமான சமூக அமைப்பை அழித்து ஜனநாயகத்தையும் சட்டத்தின் முட்டாள்தனமான ஆட்சியாக மாற்றியுள்ளனர். நரேந்திர மோடி அவர்களே உங்கள் மௌனத்தை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. உங்கள் அரசாங்கத்தில் மனசாட்சியோ அல்லது அவமானத்தின் ஒரு சிறு துளியோ மீதம் இருந்தால், நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் அரசியலமைப்பு பொறுப்பை கைவிட்டுவிட்டீர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில், மணிப்பூர் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party condemns Manipur violence video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->