எகிறும் வாக்கு சகவீதம்.. வாரி குவித்த காங்கிரஸ்.. செம்ம அடி வாங்கிய பாஜக..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் தற்பொழுது காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 85 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 27 இடங்களிலும் முன்னிலை வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுத்து வரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கர்நாடக தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்கு சதவீதத்தை பெற்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி தற்போது வரை காங்கிரஸ் கட்சி 45.36% வாக்குகளும், பாஜக 38.19% வாக்குகளும், மதசார்பற்ற ஜனதா தளம் 8.66% சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 2% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. பாஜக 2% வாக்குகள் குறைவாக பெற்றாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பாஜகவை விட கிட்டத்தட்ட 8% வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த வாக்கு சதவீத முரண்பாடு கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress party got more votes than BJP in Karnataka election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->