செல்வப்பெருந்தகை மீது வழக்கு பதிவு!
Congress protest Amit Shah Selvaperunthagai
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்காக அவர்கள் கருப்புக்கொடி ஏந்தியதோடு மட்டுமின்றி, கருப்பு நிற புறாக்கள் மற்றும் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். மேலும், அமித்ஷாவின் புகைப்படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு அனுமதி பெறப்படாத நிலையில் நடந்ததையடுத்து, சென்னை மயிலாப்பூர் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அரசாணைகளை மீறி பெரும்பேர் திரண்டது, மற்றும் மாநகர காவல் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட 192 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டபூர்வமான அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டம், சாலைகளில் நெரிசலை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Congress protest Amit Shah Selvaperunthagai