டெல்லி துணை முதல்வரை கைது செய்யக்கோரி காங்கிரஸ் போராட்டம்.!
Congress protest to arrest Deputy Chief Minister of Delhi
டெல்லியில் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நேற்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்பட 15 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் பல மணிநேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் பதிவு செய்த எஃப்ஐஆரில் 15 பேரில் மணீஷ் சிசோடியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளதால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில், சி.பி.ஐ அதிகாரிகள் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பெயர் உள்ளதால், அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
English Summary
Congress protest to arrest Deputy Chief Minister of Delhi