பதவியேற்று 24 மணி நேரம் ஆகிறது.. இன்னும் ஏன் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை?- காங்கிரஸ் கேள்வி! - Seithipunal
Seithipunal


நேற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 72 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் உள்ளனர்.

மேலும் இதில் பாஜகவைச் சேர்ந்த 61 பேர், கூட்டணிக் கட்சிகளில் இருந்து 11 பேர் நேற்று பதவியேற்றுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகப் போகிறது. ஆனால் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பம் நிலவுவதே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எப்போதும் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்படும்.

ஆனால் தற்போது மோடி அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரத்தை நெருங்கப் போகிறது. என்டிஏ கூட்டணியினரிடையே  மோடி பதவியேற்பதற்கு முன்பிருந்தே குழப்பம் நிலவுகிறது. அஜித் பவார் கட்சி இணையமைச்சர் பதவியை ஏற்கவில்லை. 

மேலும் முன்பே அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி விட்டேன் என்று கூறிய சுரேஷ் கோபி, விமர்சனங்கள் எழுந்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். மேலும் கூட்டணி கட்சியினர் முக்கிய துறைகள கேட்டு பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனாலேயே இன்னும் இலாகாக்கள் அறிவிக்கப் படவில்லை" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Questioned About Modis Cabinet Portfolio


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->