செல்வப்பெருந்தகை மாற்றம்! போர்க்கொடி தூக்கிய தலைவர்கள்! நாளை ராகுல்காந்தியை சந்திக்கும் குழு!
Congress Selvaperunthagai change soon Tamilnadu DMK Rahulgandhi
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றம் செய்ய கோரி, டெல்லியில் இன்று 3வது நாளாக முகாமிட்டுள்ள தலைவர்கள். நாளை காலை ராகுல்காந்தியை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வப்பெருந்தகையை நீக்க கோரி டெல்லியில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் 20 பேர் இன்று 3வது நாளாக முகாமிட்டு உள்ளனர்.
இன்று பிரியங்கா காந்தியுடன் இந்த குழு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், செல்வப்பெருந்தகை மாவட்ட தலைவர்களை மதிப்பதில்லை. மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஆலோசிப்பதும், அழைப்பதும் இல்லை.
புதிய மாவட்ட தலைவர் பட்டியல் முறைகேடானது. இதேநிலை தொடர்ந்தால் 2026 தேர்தலுக்கு பணியாற்ற மாட்டோம். மாற்று கட்சி சிந்தனை இப்போது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரைப் பெற்ற பிரியங்கா காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கே.சி வேணுகோபாலை சந்தித்தும் இந்தக்குழு புகார் அளித்துள்ளது. கட்சியின் உயர்மட்ட ரீதியில் இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என கே.சி வேணுகோபா உறுதி அளித்துள்ளாராம்.
இந்நிலையில், நாளை ராகுல்காந்தியை இந்த குழு சந்திக்க உள்ளதாகவும் இன்னும் 1 வாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றம் செய்யப்படுவர் என்றும் டெல்லி அரசியல் வட்டாரம் தகவல் சொல்கிறது.
English Summary
Congress Selvaperunthagai change soon Tamilnadu DMK Rahulgandhi