தேர்தல் நடக்கும் முன்பே தோல்வியை அறிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்.!
CONGRESS STATE LEADER SPEECH VIRAL
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல், வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மார்ச் மாதம் வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட அறிவிப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்து இருக்கும் கருத்து தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.
அவர் தெரிவித்த அந்த கருத்தில், "இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவா, பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்துவிடும். அதேசமயத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த கருத்தை நெட்டிசன்கள்,
"ஆக, நீங்களும் 2 மாநிலத்தில் தோல்வியடைய போறிங்க.,"
உலகத்துலயே தேர்தல் நடக்கும் முன்பாகவே, தோல்வியை ஒப்புக்கொண்ட முதல் கடசி கங்கிரஸ் காட்சியத்தான் இருக்கும்" என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
CONGRESS STATE LEADER SPEECH VIRAL